தமிழகம்

இராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு புதுமை பொங்கல் விழா நடைபெற்றது. மாநில தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது

50views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு பொதுமைநடைபெற்றது இதில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி உங்களை துவங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பிஜேபி கூட பல கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் சமுதாய தலைவரும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி சட்டைகளை வழங்கி டாக்டர் கிருஷ்ணசாமி சிறப்பு உரையாற்றினார் இதை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில்,  வெள்ளி விழா மாநாட்டில் முக்கிய முடிவை அறிவித்தோம். கடந்த 25 ஆண்டுகளாக தென் தமிழகத்தில் பல சமுதாய மக்களுக்கு இடையே முரண்பாடுகள் இருந்தன. புதிய தமிழகம் மீது கலவர முத்திரை இருந்தது. தமிழ் இலக்கியங்களில் ஜாதி பிரிவினை கிடையாது. தொல் காப்பியத்தில்  மண் வளம் அடிப்படையில் ஐந்தினைகள் தான் இருந்தன.  சுதந்திரத்திற்கு போராடிய காங்கிரஸ் கட்சி சுதந்திரம் வந்த பின் சமூக ஏற்ற தாழ்வுகளை ஒலிக்க வில்லை.  திராவிடம் பேசியவர்கள் 67 முதல் இன்று வரை ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்களால் இரு சமுதாயத்தை இணைக்க வில்லை.
திராவிட முன்னேற்ற கழகம் என்பதை தமிழர் முன்னேற்ற கழகம் என பெயர் வைத்து தமிழர்களை இணைத்து இருந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம்.  திராவிடம் என்று கூறி மக்களை பிரித்தது தான் திராவிட கட்சியினரின் சாதனை.  பொங்கலுக்கு ரூ.ஆயிரம் மற்றும் வேஷ்டி, சேலைக்கு மக்களை எதிர்பார்க்க வைத்து தான் ஆட்சியாளர்களின் சாதனை.
முற்போக்கு, திராவிடம், தமிழ் என வார்த்தை ஜாலம் செய்து, ஒரு குடும்பம் தன் வளர்ச்சி மட்டுமே உயர்த்தி உள்ளது. அவர்கள் தமிழ் என செல்வதை கூச்சமாக நினைத்து கொண்டிருக்கின்றனர்.  தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்து இருந்தால் உங்களது தமிழ் பாசத்தை ஏற்று கொள்ளலாம்.  எல்லோரும் பாரத தாயின் புதல்வர்கள் என ஒன்றிமைப்பதே எங்களின் கனவு.
தமிழகத்தில் நடைபெற்ற ஜாதி சண்டைகளுக்கு காரணம் திராவிடம் தான்.  அடுத்த 25 ஆண்டுகளில் ஜாதி, மத, இன சண்டைகளை ஒழிப்பதே நமது இலக்கு.  சிறிய பிரச்னைகளை அந்த இடத்திலேயே ஒழிக்க வேண்டும்.
சமூக நீதியை கேட்ட வார்த்தை யாக திராவிட கட்சிகள் மாற்றியதால் தான் பொதுமை என்ற வார்த்தை பயன்படுத்துகிறோம். அரசு இலவச வேஷ்டி சேலை வழங்காததால் நாங்கள் கொடுக்கிறோம். எனக் கூறினார் எனும் தொடர்ந்து பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி
தமிழகம் என ஆளுநர் கூறியது நூறு சதவீதம் சரி. அது தான் அனைத்து மக்களின் பிரதிபலிப்பு. நீங்கள் முதலில் தமிழர் முன்னேற்ற கழகம் என பெயர் வைத்து விட்டு ஆளுநரை குறை கூறுங்கள்.
எங்கள் பொதுமை பொங்கல் விழாவில் பாஜக தொழில் பிரிவு மாநில செயலாளர் ராமகிருஷ்ணராஜா,  சாலியர் மாகாசன சங்க மாநில தலைவர் கணேசன் , யோகிஸ்வரர் சமுதாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பொங்கல் பண்டிகை என்பது தமிழர் திருநாள் தைத்திருநாள் மட்டும் அல்ல உழவர்களின் திருநாள்.  தமிழர்களை ஒருமைப்படுத்துவதில் திராவிட ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள்.  திராவிட இயக்கம் தோன்றி 75 ஆண்டுகள் ஆகிறது. தமிழர்களை திராவிடம் என்று ஒற்றுமைப்படுத்த முடியாததால் சாதி ரீதியாக அவர்களைப் பிரிக்கின்றனர்.

ஆளுநர் உடைய தமிழகம் என்ற கூற்றை எதிர்த்து பேச திமுகவிற்கு தார்மீக கடைமை இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக 2500 வழங்கிய போது குறை கூறிய திமுக தற்போது ஆயிரம் ரூபாய் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் ஏனென்றால் தற்போது விலைவாசி உயர்வு அதிகமாக உள்ளது.  இமயமலை போன்று இந்தியாவின் அடையாளம் ராமர் பாலம். சீனப் பெருஞ்சுவர் தாஜ்மஹால் பைசா கோபுரத்தை அதிசயமாக ராமர் பாலத்தை  பார்ப்பார்கள்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!