தமிழகம்

சின்னமனூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

171views
தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உட்பட்ட பகுதியில் 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதோர்களுக்கு எழுத்தறிவு கொடுக்க உள்ள தன்னார்வலர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலம் இரண்டு நாட்கள் பயிற்சி ஸ்ரீகிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி சின்னமனூரில் டிச.12 அன்று நடைபெற்றது.
தொடர் இரண்டு நாள் பயிற்சியின் முதல் நாள் பயிற்சியை ஸ்ரீ கிருஷ்ணய்யர் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கனி அவர்கள் முகவுரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார்.
தன்னார்வலர்களுக்கான முதல் நாள் பயிற்சியை சின்னமனூர் வட்டார வள மையத்தின் ஆசிரியர் பயிற்றுநர்களான பாக்கிமரியான நான்சி, சாமுண்டீஸ்வரன், லூக்காபாக்கி, ஜெயந்தி ஆகியோர் சிறப்பாக முன்னின்று வழி நடத்தினார்கள்.
புதிய பாரத எழுத்தறிவு இயக்கம் என்பது 2022-ம் ஆண்டிலிருந்து தொடங்கி 2027 வரை தொடர் 5 ஆண்டுகளாக இத்திட்டமானது செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டமானது ஒவ்வொரு நிதியாண்டு கணக்கை கொண்டு செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்தில் 15 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட அதாவது வயதிற்கு எல்லையோ, தகுதியோ இல்லாமல் கல்வி அறிவில்லாதோர் இத்திட்டத்தில் சேர்ந்து கல்வி கற்று பயன் பெறலாம் எனவும்,
இத்திட்டத்தில், மொத்தம் 23 பாடத் தலைப்புகளின் கீழ் கற்பிக்கப்படும்.முதல் 20 நிமிடம் ஆர்வமூட்டல் பாடமும்,
அடுத்த 20 நிமிடம் செய்திகள், பொது அறிவு மற்றும் தகவல்கள், அடுத்த 40 நிமிடம் பாடம் நடத்துதல்,அடுத்த 40 நிமிடம் விளையாட்டு மற்றும் புதிர்கதைகள் எனவாக கற்போருக்கு எவ்வாறெல்லாம் கற்பித்தலுக்கான நடையில் பாடம் நடத்த வேண்டும் என இத்திட்டத்தின் நோக்கத்தினை ஆசிரிய பயிற்றுநர்கள் தன்னார்வலர்களுக்கு விளக்கி எடுத்துக் கூறினார்கள்.
அதனைத் தொடர்ந்து, வட்டார வள மையத்தின் மேற்பார்வையாளர் சகாயராஜ் அவர்கள் பயிற்சியை பார்வையிட்டு ஊக்கமளித்தார்.
பயிற்சியில் கற்போரை எவ்வாறு மையத்திற்கு வரவழைத்து எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுடன் கற்பித்தல் செய்வது என்று விளக்கப்பட்டது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!