தமிழகம்

அசந்து தூங்கும் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு பாடம் புகட்ட ஆர்ப்பட்ட களம் கண்ட அரசு பள்ளி மாணாக்கர்கள் பள்ளிக்கு இரண்டு நாள் விடுப்பு

45views
தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துதேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில், மழைக்காலங்களில் மழை தண்ணீர் வழிந்து செல்ல வழிவகை செய்யாத வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சிறுமழை பெய்தாலும் அப்பள்ளி வளாகத்தில் மழை நீரானது குளம் போல தேங்கி நின்று பள்ளி மாணாக்கர்களுக்கு நோய் தொற்றோடு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
மேலும்,பள்ளியின் முகப்பில் உள்ள சாக்கடை அடைப்பை பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மன்றாடியும் அதனை சீர் செய்ய வீரபாண்டி பேருராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்தும் விதமாக செயல்பட்டு வருவதால் சாக்கடையில் மழை நீரோடு கழிவு நீர் குளம் போல தேங்கி நின்று வீரியம் வாய்ந்த கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பள்ளி பாட நேரங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் கொசுக்கடியில் அவதிபட்டு வருகின்றனர் இதனால் மாணாக்கர்களுக்கு பெயரிடப்படாத ஒரு புது வித தொற்றுநோய் பரவும் சூழல் காணப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, அரசு பள்ளி நிர்வாகம் வீரபாண்டி பேரூராட்சி தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் செவி சாய்க்காமல் இருந்து வருகிறார் என குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
அது சமயம் அரசு பள்ளி மாணாக்கர்களின் நலனை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நோய்த் தொற்று அச்சகத்தை போக்க வேண்டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து டிச.09 அன்று காலை பள்ளி பாட வேளையில் அப்பள்ளியில் பயிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் எனவாக திரண்டு பள்ளியின் அவலம் குறித்து பலமுறை புகார் கூறியும் செவிசாய்க்காத வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து தேனி-குமுளி செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டக்களம் கண்டனர். இதானால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.
அரசு பள்ளி மாணவர்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றக்கோரி பள்ளி மாணாக்கர்களே மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போரடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி காட்சியளித்தது.
தகவலறிந்து விரைந்து வந்த காவல் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்களம் கண்ட மாணாக்கர் மற்றும் பெற்றோர்களிடத்தில் ஒரு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி  பேச்சுவார்த்தையில், மழைக்காலங்களில் மழை தண்ணீர் வழிந்து செல்ல வழிவகை செய்து கொடுக்கப்படும். பள்ளி வளாகத்தில் மழை நீரானது குளம் போல தேங்கி நிற்பதை மண் போட்டு சரி செய்து பள்ளி மாணாக்கர்களுக்கு நோய் தொற்று போன்ற சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். அதற்காக பள்ளிக்கு இரண்டு நாள் விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொது மக்களின் தேவைகள் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இது போன்ற அவலங்களை தீர்ப்பதற்கு பாதிக்கப்பட்டவர்களே வீதியில் இறங்கி போராடி உரிமைகளை பெறுவதற்காகவா மாவட்ட நிர்வாகம் இருக்கிறது. இதற்கு எதற்கு மாவட்ட நிர்வாகம்?  போட்டோ ஷூட் நடத்துவதற்கா மாவட்ட நிர்வாகம்? என தேனி மாவட்ட வாழ் சமூக நல ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!