இந்தியா

புதுச்சேரியில் ஆசிரியர் நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு உலக சாதனை ஐம்பெரும் விழா

82views
புதுச்சேரி, அக்டோபர் 27, 2024:
கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் நெக்சஸ் குழுமம் இணைந்து நடத்திய “4வது ஆசிரியர் நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு உலக சாதனை ஐம்பெரும் விழா” புதுச்சேரி புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த ஐம்பெரும் விழாவில், கல்வி மற்றும் ஆராய்ச்சி, நூல் வெளியீடு, 78வது இந்திய சுதந்திர தின சொற்பொழிவு, விருது வழங்கும் விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஆகியவை இடம்பெற்றன. கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன் மற்றும் முனைவர் கவிதா செந்தில் நாதன் அவர்கள் ஏற்பாட்டில் கலைமாமணி செவாலியர் VG சந்தோசம் அவர்கள் தலைமை தாங்க, காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் N. பஞ்சநதம் சிறப்புரையாற்ற, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் V. முத்து மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் போ. சத்தியமூர்த்தி முன்னிலை வகிக்க அருணா கல்வி நிலையங்களின் தலைவர் முனைவர் அருணா தொல்காப்பியன் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் மதிப்புறு முனைவர் செ. வெங்கடேசன், மஸ்கட் முனைவர் பஷீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.
பல சிறப்பு அழைப்பாளர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

பன்னாட்டுக் கல்வியாளர்களின் கருத்தரங்கம், புதிய நூல்களின் வெளியீடு, 78வது சுதந்திர தின சொற்பொழிவுகள், சிறந்த கல்வியாளர்களுக்கு விருதுகள் வழங்குதல் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு என இந்த விழா, கல்வித்துறையின் முன்னேற்றத்திற்கும், சமூக நலனுக்கும் பெரும் பங்காற்றும் என்று சென் நெக்சஸ் குழுமம் மற்றும் தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!