தமிழகம்

உசிலம்பட்டி அருகே போக்சோ வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டதைக் கேட்டு தப்பி ஓடிய கைதி – மீண்டும் தனிப்படை போலிசாரால் கைது செய்யப்பட்டார்

124views

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சி.நடுப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ், இந்த இளைஞர் மீது கடந்த 2017ஆம் ஆண்டு உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட போக்சோ வழக்கு தொடர்பான விசாரணை கடந்த நவம்பர் 1ஆம் தேதி மதுரை போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சுரேஷ்-க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை கேட்டதும் அன்றைய தினமே நீதிமன்ற வளாகத்திலிருந்தவாரே சிறை தண்டனை கைதி தப்பி ஓடிய சூழலில் போலிசார் தீவிரமாக தேடி வந்தனர்.,
இந்நிலையில் கடந்த வாரம் மதுரை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி சென்ற சுரேஷ்-யை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இன்று எழுமலை பகுதியில் சுற்றித் திரிந்த சுரேஷ் -யை தனிப்படை போலிசார் மீண்டும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுரேஷ் மதுரை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவிற்கு பின் சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!