தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சி சார்பில் புகை மற்றும் மாசில்லா போகிப்பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

51views
தமிழர் திருநாளாம் தைத்திருநாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நாளில் வீட்;டிலிருக்கும் பipழய உபயோகமில்லாத பொருட்களை குவித்து எரிப்பது வழக்கம்.இதனால் காற்று மாசுபடுகிறது.இதனை தவிர்த்திடும் வகையில் வீட்டில் எரிக்கப்படும் பொருட்களை எடுத்து வைத்து நகராட்;சி குப்பை வண்டியில் போடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி உசிலம்பட்யில் நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் நiபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பொது குப்பை கொட்;டாமல் சுத்தமாக வைத்துக் கொள்வேன்.உபயோகமற்ற பொருட்களை தீயிட்டு எரிக்காமல் நகராட்சி குப்பை வண்டியில் ஒப்படைப்பேன் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் மஞ்சள் பை உபயோகப்படுத்துவேண் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பேரணியின் போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற இப்பேரணியில் நகர்மன்றத் தலைவர் சகுந்தலா ஆணையாளர் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!