தமிழகம்

அரசு மணல் குவாரி தடை விதிக்க ராமநாதபுரத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

79views
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் சிறுகம்பையூர் அருகே அரசு மணல் குவாரி உள்ளது. இதில் அதிக அளவு மணல் எடுத்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டுமென பாமகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சை.அக்கீம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ், அமைப்பு செயலாளர் ஆர்.ஜீவா, திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைய முயன்ற பாமகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் ராஜா, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், மாவட்ட உழவர் பேரியக்க தலைவர் ஐ.பி. கணேசன், ராமநாதபுரம் நகர் செயலாளர் இப்ராஹிம், நகர் தலைவர் ராஜா ரபிக், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், மண்டபம் ஒன்றிய மாணவர் சங்க செயலாளர் களஞ்சிய ராஜா, கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, கீழக்கரை நகர் செயலாளர் லோகநாதன், கீழக்கரை நகர் தலைவர் அப்துல் லத்தீப், மாவட்ட விவசாயிகளின் அணி மாயழகு உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!