தமிழகம்

பாசன நீர் தடுப்பு குறித்து ராமநாதபுரம் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

69views
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெங்கலக்குறிச்சி, பொசுக்குடி, புளியங்குடி, அலங்கானூர், மகிண்டி, நீர்க்குன்றம், காக்கூர், வளநாடு, செங்கப்படை ஆகிய கிராமங்களுக்கு பரமக்குடி வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் தடுப்பணை வழியாக கூத்தன் கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் கண்மாய்கள் ஆகும்.
கூத்தன் கால்வாயில் வைகை தண்ணீர் தற்போது வந்த வண்ணம் உள்ளது. இதை பாம்பூர் அருகே உள்ள தலைக்கால் கிராமத்தை சேர்ந்தோர் கால்வாய் குறுக்கே அடைத்து தண்ணீரை வரவிடாமல் தடுத்துள்ளனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இன்று பரமக்குடி வந்த மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸிடம் வெங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்டி.செந்தில்குமார் தலைமையில் முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.கலைச்செல்வி ராஜசேகர், புளியங்குடி பாலு மற்றும் பொசுக்குடி, வெங்கலக்குறிச்சி, காக்கூர் கிராம மக்கள் சந்தித்து மனு அளித்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!