தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தின் அவசரத்தேவை

145views
தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் கிடையாது. பெரியவர்கள் முதியவர்கள் கைக்குழந்தையுடன் ஆங்காங்கே நின்றபடியே பேருந்து வந்தவுடன் ஏறி செல்கிறார்கள்.
பெரியகுளம் நகராட்சியில் பலமுறை அதிகாரியிடம் கவனத்தில் தெரியப்படுத்தியும் எந்த ஒரு பயனும் இல்லை. மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் அந்த மக்கள் வேதனையுடன் மழையில் நனையும் பொழுது நகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் அனைவரும் அந்த வழியாக போக வர உள்ளார்கள்.
அந்த நிழல் கூடைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. அந்த நிழல் கூடையில் குடி தண்ணீர்டேங்க் உள்ளது அதில் தண்ணீர் ஊற்றி பல மாதங்கள் ஆகிவிட்டது. அதையும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கிடையாது. டேங்க்கின் மேல் மூடியும் கிடையாது. மூடி ஒரு பக்கம் டேங் ஒரு பக்கமாக உள்ளது. இதை பெரியகுளம் நகராட்சி ஊழியர்கள் அனைவரும் காலை மாலை பெரிய குளம் புதிய பேருந்து நிலையத்தில் வந்து போகும் வண்ணமாக உள்ளனர்.
தண்ணிர்டேங்க் மக்களின் பார்வைக்கு பொருட்காட்சியாக வைத்துள்ளார்கள். பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கு மேல் வெளியூரில் இருந்து வண்டிகள் வந்து செல்கின்றன. பயணிகள் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலைமைக்கு பெரியகுளம் நகராட்சி மெத்தனப் போக்கில் உள்ளது.
மாடுகள் பெரியகுளம் நகர் பகுதியில் உள்ள அத்தனை வீதிகளில் சாலையின் நடுவில், பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் என உலா வந்து கொண்டே இருக்கிறது. மாடுகளின் நடமாட்டம் இருப்பதால் விபத்துக்கள் அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது.
பெரியகுளம் நகராட்சியில் உள்ள அதிகாரிகள் இதைக் கண்டு கொள்வதில்லை. பொதுமக்கள் சிறுவர்கள் பெரியவர்கள் அச்சத்தில் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.
பெரியகுளம்நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!