தமிழகம்

ராஜபாளையம் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

46views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இனாம் கோவில்பட்டி இந்திரா காலனி பகுதியில் சுமார் 30 குடும்பங்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த ஐந்து வருடங்களாக பழனிச்சாமி என்பவர் கோழி பண்ணை நடத்தி வருகிறார்.  அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோழிப்பண்ணை அமைப்பதற்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
மேலும் கோழி பண்ணை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவது கோழி கழிவுகளை சுகாதாரத்திற்க்கு கேடு விளைவிக்கும் விதமாக சாலைகளில் வீசுவது போன்ற செயல்பாட்டினால் பல்வேறு விதமான நோய் தொற்று ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு இறக்கும் கோழிகளை நாய்கள் இழுத்துக் கொண்டு வந்து குடியிருப்பு பகுதியில் வீசி செல்வதால் ஈக்கள் மற்றும் கொசு தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு நோய் தாக்கம் ஏற்படுவதாகவும் மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இது குறித்து கடந்த மாதம் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் சிவகாசி சுகாதார துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து குறிப்பிட்ட தினங்களுக்குள் கோழிப்பண்ணையை இவ்விடத்திலிருந்து அகற்ற உத்தரவிட்டனர்.  ஆனால் அதிகாரிகள் கொடுத்த கெடு நிறைவடைந்தும் கோழிப் பண்ணையை அகற்ற உரிமையாளர் மறுத்ததாக குற்றம் சாட்டியும், கூடுதலாக கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்ததாகவும் குற்றம் சாட்டி இன்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது குறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோழி பண்ணையை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காவல்துறை அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  ஆனால் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!