தமிழகம்

நெல்லையில் தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்; பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கல்

164views
நெல்லையில் தமிழ் பாராம்பரிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடந்தது. நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் என்பிஎன்கே கலைப் பண்பாட்டு மன்றம் இணைந்து பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்வாக தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை “கிராமிய ஒலிம்பிக்ஸ்- சீசன் 01” என்ற பெயரில் அரசு அருங்காட்சியகம் திறந்த வெளி கலையரங்கில் ஜனவரி 16 அன்று நடத்தியது. அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி நிகழ்ச்சியை தொடங்கி தலைமை உரை ஆற்றினார். இந்த நிகழ்வில் நெல்லை வட்டார வழக்கு மற்றும் தகத்தாய தமிழ் மரபு போன்ற தமிழர் பெருமை பேசும் புத்தகங்களை எழுதியுள்ள எழுத்தாளர் வெள்உவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். ஐந்து வயது முதல் 75 வயது வரை எல்லா வயதை சேர்ந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவருக்கும் ஷாட் பூட் த்ரீ, ஒற்றையா , கிச்சு கிச்சு தாம்பலம், குலை குலையா முந்திரிக்கா, பம்பரம், பூக்கல். (5 பொருள்), கயிறு இழுத்தல், பல்லாங்குழி, நொண்டி ஆட்டம் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசுகளும் வந்திருந்த பொதுமக்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் அதிர்ஷ்ட பரிசும் வழங்கப்பட்டது. பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை திருநெல்வேலி மலபார் கோல்டன் டைமண்ட்ஸ் நிறுவனத்தினர் வழங்கி சிறப்பித்திருந்தனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை என்.பி.என்.கே கலை பண்பாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளர் மு.வெ.ரா மற்றும் அரசு அருங்காட்சியக ஊழியர்கள், முனைவர் கணபதி சுப்ரமணியன், சுப்பையா, பாப்பாக்குடி முருகன், செல்வன் ஸ்ரீரங்கம், கவின் கலை ஆசிரியை செல்லம்மா மற்றும் பன்னிருடியப்பன் கல்லூரி தன்னார்வலர்கள், மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!