தமிழகம்

வேலூர் அருகே மாற்று சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவர் ஆதிதிராவிடர் என போலி சான்றிதழ் கொடுத்தவர் மீது ஆட்சியர் நடவடிக்கை

98views
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட ஒடுக்கத்தூர் அடுத்ததோளப்பள்ளி ஊராட்சியில் கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. அதில் திமுகவை சேர்ந்த கல்பனா போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்கியராஜ், கல்பனா போலி ஜாதி சான்று கொடுத்து (கல்பனா ஆதிதிராவிடர் அல்ல) வெற்றிபெற்றதாக வேலூர் மாவட்ட அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு கொடுத்தார்.மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் செயல்படும் விழிக்கண் விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் கல்பனா ஆதிதிராவிட சமுதாயத்தை சார்ந்தவர் இல்லை என நிருபணம் ஆகியது. அதன்படி தலைவரின் செக் பவர் பறிக்கப்பட்டது. பாக்கியராஜ் புகாரின்பேரில் வேப்பங்குப்பம் காவல்நிலையத்தில் கல்பனா மீது 7 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் கொடுத்து வெற்றிபெற்ற கல்பனா எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!