தமிழகம்

பனை பொம்மைகள் தயாரிப்பு மற்றும் பனை மரத்துடன் குழந்தைகள் கலந்துரையாடல்

124views
மதுரை மாவட்டம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பனை பொம்மைகள் தயாரிப்பு மற்றும் பனை மரத்துடன் குழந்தைகள் கலந்துரையாடல்
மிகவும் நடைபெற்றது.., மேலும் இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த கல்வி மதுரை மாவட்ட உதவி திட்ட அலுவலர் கார்மேகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது., ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார்., தலைமை ஆசிரியர் தென்னவன் அனைவரையும் வரவேற்றார்.,
மக்கள் தொண்டன் அசோக்குமார் அவர்கள் பனைமரமாக மாறுவேடமிட்டு பனை மரத்தின் வரலாற்றை, முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி குழந்தைகளுடன் உரையாடினார்.,
பின்னர் பனை விதையில் முறுக்கு மீசை தாத்தா பொம்மை,மாண்புமிகு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பொம்மை, சிங்கம், குரங்கு, யானை பொம்மைகள், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை  மற்றும் பல வகையான பொம்மைகளை தயார் செய்து அதனை தயாரிக்கும் முறையினையும் குழந்தைகளுக்கு செய்து காட்டினார்.,ஜவஹர்லால் நேரு, நேதாஜி போன்ற தேசத்தலைவர்கள் வேடமிட்ட குழந்தைகளுக்கு பனை பொம்மைகள் பரிசாக அளிக்கப்பட்டன., குழந்தைகள் பொம்மைகள் செய்து அதற்கு வண்ணம் தீட்டினார்கள்.,பனை மரம் பற்றிய வினாடி வினா நடத்தப்பட்டு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன.  மாநில மரமான *பனை மரங்களை காப்போம்* என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் அவர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து சிரியர்களையும் வாழ்த்தி பள்ளி மிகச் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார்.,ஆசிரியர் ராஜவடிவேல் தொகுத்து வழங்கினார்.,விழாவில் சமூக ஆர்வலர்கள் முராபாரதி, காயத்ரி தேவி மற்றும் பெற்றோர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசு வழங்கப்பட்டது. ,ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.,விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மனோன்மணி, அருவகம், தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா, சுகுமாறன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்  வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!