சென்னை: சென்னையில் இன்று (பிப்.,12), பெட்ரோல் லிட்டருக்கு 90.44 ரூபாய், டீசல் லிட்டருக்கு 83.52 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 90.18 ரூபாய்,...
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களின் வாழ்வாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலையினை நாளுக்கு நாள் உயர்த்தி மக்களை வதைத்து வருகிறது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய் 18 காசுகள், டீசல் ஒரு லிட்டர் 83 ரூபாய் 18 காசுகள். கொரோனா பெருந்தொற்று...
இளைஞர்கள் கடினமாக உழைத்தால் கிரிக்கெட் விளையாட்டில் பிரகாசிக்கலாம்,’ என இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கிரிக்கெட் அணி வேக பந்து வீரர் நடராஜன் பேசியபோது, "ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பிய போது, ஊர் மக்கள் திரண்டு அளித்த வரவேற்பை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, ஆஸ்திரேலியாவில்...