சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த அரசியலுக்கு வராத ஒரு முக்கிய காரணமாக அண்ணாத்த படம் அமைந்தது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடும் சுகாதார நடைமுறைகளுக்கு மத்தியில் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இன்னும் ஒரு வாரத்தில் இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து விடும் என்று இயக்குனர் சிவா அறிவித்துள்ளார். எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு திரைப்படம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜனிகாந்த அடுத்த படத்தில் சன் Pictures உடன் கரம் கோர்க்க உள்ளதாக கோலிவுட்...
இந்தி சினிமா வரலாற்றில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படத்தில் நடித்து வருகிறார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தலைவி படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. எனவே, சாதாரணமக்கள்...
தமிழ் சினிமா வரலாற்றில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் கரணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படம் வெளியாகவுள்ள நிலையில் பெரும் சாதனையை நிலைநாட்டவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் முதன்முறையாக ஆங்கிலம்...
இந்தியத் திரை உலகின் பிரபல நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்துப்பட்டுள்ளது. இந்தியாவில் அனைத்து தரப்பினரையும் பாதித்து வரும் கொரோனா தொற்று திரை உலகினரையும் விட்டுவைக்கவில்லை.. தீபிகா படுகோனின் தந்தை தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது தீபிகாவிற்கு நேற்றய தினம் இரவு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் அவரது தாயார் உஜ்ஜால மற்றும் இளைய சகோதரி அனிஷா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....
ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக பின் தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் வீரர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பிசிசிஐ உறுதி அளித்துள்ளது. ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்கள் எப்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து பேசியுள்ள பிசிசிஐ தரப்பு எல்லா வீரர்களும் பாதுகாப்பாக...
ஐபிஎல் தொடரை ஒத்திவைக்கும் முடிவை பிசிசிஐ பல கட்ட ஆலோசனைக்கு பிறகே எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் முதலில் தொடரை தள்ளி வைக்கும் எண்ணம் பிசிசிஐ இல்லை என சொல்லப்படுகிறது. பயோ பபுளை கடுமையாக்கி, மீதமிருக்கும் போட்டிகளை எப்படியாவது முடித்துவிடலாம், இப்போது விட்டால் பின்னர் நடத்த முடியாது...
அகதிகள் மீட்பு... கனேரி தீவுகள் பகுதியில் கடலில் தத்தளித்த 48 அகதிகளை ஸ்பெயின் கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். கிரேன் கனேரியாவில் இருந்து 30 மைல் தூரத்தில் கடலில் தத்தளித்த 3 குழந்தைகள், 18 பெண்கள் உள்பட 42 பேரை மீட்டு Arguineguin துறைமுக முகாமில் தங்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முன்னதாக கடந்த திங்கட்கிழமை இதேபோல் கடலில் தத்தளித்த 16 அகதிகளை கடற்பகுதி அதிகாரிகள் மீட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது....
மெக்சிகோவில் பாலம் இடிந்து விழுந்து மெட்ரோ ரயில் விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டில் அண்மையில் நடந்த ஒரு ரயில் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நின்று கொண்டிருந்த டிரக் மீது அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த ரயில் மோதியதில் 49 பேர் உயிர் இழந்தனர். கிட்டத்தட்ட 200 பேர் படுகாயம் அடைந்தனர். அதேபோல தற்போது மெக்சிகோவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நகரின் தெற்கே உள்ள...
துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவுப்படி புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க அக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி நேற்றைய தினம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து உரிமை கோரியிருந்தார். இந்நிலையில் அங்கு ஏற்கனவே உள்ள 14வது சட்டமன்றம் துணை நிலை ஆளுநர் உத்தரவுப்படி மே மாதம் 3ம் தேதி கலைக்கப்பட்டதாக சட்டமன்ற செயலாளர் முனுசாமி...