தமிழகம்

அப்பாவி ஓட்டுநர்களை அலற விடும் மதுரை போக்குவரத்து காவலர்கள்: நோ பார்க்கிங் பலகைகள் வைத்து உதவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

77views
மதுரை சிம்மக்கல் பகுதிகளில் பல்வேறு ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் உள்ளன.  இந்த கடைகளுக்கு தினம் தோறும் பல ஊர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்க வருகின்றனர்.
ஆகையால் அப்பகுதி எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். வெவ்வேறு ஊர்களில் இருந்து வரும் நபர்களுக்கு நோ பார்க்கிங் எது எங்கே வாகனங்கள் நிறுத்துவது போன்ற விஷயங்கள் தெரியாத சூழ்நிலையில் வாகனங்களை எங்கேயாவது நிறுத்தி விட்டால் போதும் கண் கொத்தி பாம்பாக இருக்கும் போக்குவரத்து காவலர்கள் உடனடியாக அங்கே வந்து குறைந்தது 500 ரூபாய் அபராதம் விதித்து விடுகின்றனர்.
இதில் கொடுமை என்னவென்றால் நோ பார்க்கிங் பலகை கூட சில இடங்களில் வைக்கப் படுவது இல்லை அது போன்ற இடங்களில் வாகனங்கள் நிறுத்தினாலும் அவர்களையும் விடுவது இல்லை. சிலர் அன்றாடம் தமது சில்லறை செலவுகளுக்காக கஷ்டப் பட்டு பொருட்கள் வாங்கி அதை வைத்து சம்பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. போலிசாரிடம் எவ்வளவு கெஞ்சினாலும் சரி, சார் இங்கே நோ பார்க்கிங் பலகை இல்லை அதனால் தான் நிறுத்தினேன் என அழுதாலும் போலீஸாரிடம் நோ இரக்கம்.  பொதுமக்களின் நலன் கருதியும் வெளியூரில் இருந்து வரும் நபர்கள் அறிந்து தகுந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வகையிலும் சிம்மக்கல் பகுதிகளில் எங்கே வாகனங்கள் நிறுத்துவது, எந்த இடங்கள் நோ பார்க்கிங் போன்ற விஷயங்களை ஆங்காங்கே பலகைகள் வைத்து உதவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!