தமிழகம்

நோ என்ட்ரியில் வந்த ஷேர் ஆட்டோ அபராத விதித்த போக்குவரத்து காவல்துறை

416views
கடந்த வெள்ளிக்கிழமை அன்று காளவாசல் இருந்து மதியம் 2:50 மணி அளவில் பைபாஸ் சாலையில் இருந்து காளவாசல் பாலத்துக்கின் கீழ் நோ என்ட்ரியில் நோக்கி வந்த கூட்டத்தை பார்த்தவுடன் ஷேர் ஆட்டோ ஒன்று வேகமாக வந்துள்ளது அதே நேரத்தில் காளவாசல் இருந்து பழங்காநத்தம் நோக்கி திரும்பிய தினசரி நாளிதழ் தலைமை நிருபர் மீது ஷேர் ஆட்டோ ஆனது மோத இருந்தது. சற்று சுதாரித்துக் கொண்ட நிருபர் எச்சரித்து இது சம்பந்தமாக வாகன எண் மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் போக்குவரத்து துணை ஆணையாளர் புகாராக whatsapp மூலமாக அனுப்பி வைத்திருக்கிறார்.
இது சம்பந்தமாக தீவிரமாக அந்த ஷேர் ஆட்டோ தேடி வந்த நிலையில் இன்று காளவாசல் சிக்னலில் அந்த ஆட்டோ வந்த பொழுது போக்குவரத்து துணை ஆய்வாளர் தாஜூஸ் ஆட்டோவை ஓட்டி வந்த அஜய் என்கின்ற ஆட்டோ ஓட்டுனருக்கு 1500 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் இதுபோன்று மீண்டும் ஒரு வழி பாதையில் வந்தால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் நாளுக்கு நாள் ஷேர் ஆட்டோவில் அட்டூழியம் பெருகி உள்ளது எனவும் ஆட்களை ஏற்றுவதற்காக நினைத்த இடத்தில் நிறுத்துவதும் போட்டோ போட்டி போட்டுக் கொண்டு ஒரு வழி பாதையில் வருவதும் நான் முந்தி நீ முந்தி என முந்தி சொல்வதும் போட்டி போட்டு ஆட்டோக்கள் வலம் வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் ஓடுகின்ற ஷேர் ஆட்டோ களில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனருக்கு ஓட்டுனர் உரிமை இல்லை எனவும் பல ஆட்டோக்களுக் பர்மிட் இல்லை எனவும் விபத்துகளில் படுகாயம் அடைந்தால் எவ்வித இழப்பீடும் கிடைக்க முடியாத அவல நிலை உள்ளது எனவும் வேதனையுடன் தெரிவித்தார்.  ஒருவழிப்பாதையில் வந்த ஆட்டோவை கண்டு நிருபர் சுதாரித்துக் கொண்டதால் விபத்திலிருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!