தமிழகம்

நோ பேக் டே – ஒரு நாள் பள்ளிபாடப்புத்தக பைக்கு விடுமுறை அளித்த பள்ளி.மகிழ்ச்சியில் மாணவர்கள்

482views
மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப பள்ளிப்பாடங்களும் மாறி பெரும்சுமையாய் பள்ளிக்குழந்தைகள் தலையில் விழுகின்றன.இதில் செய்முறைத்தேர்வு வீட்டுப்பாடம் தேர்வு என பள்ளிக்குழந்தைகளை இயந்திரத்தனமாய் சுழல வைக்கின்றன.இதனால் பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கு செல்வதையே பெரும் சுமையாய் கருதி மன உளைச்சலுடன் பள்ளிக்குச் செல்கின்றனர்.
மேலும் பள்ளியில் சரியாகப்படிக்காமல் இடைநிற்றல் தற்கொலை போன்ற சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.இதனை மாற்றும் முயற்சியாக புத்தகப் பையில்லா நாள் என்ற நாளை உருவாக்கி பள்ளிக்குழந்தைகளை பள்ளியில் ஜாலி மூடில் வைத்திருக்கும் நாளை உருவாக்கி கடைபிடித்து வருகிறார் பள்ளி தலைமைஆசிரியர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட் டையில் உள்ளது அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சாஸ்வதி தொடக்கப்பள்ளி.இங்கு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.கொரோனா தாக்கத்திற்குப்பின் பள்ளி வருவதற்கவே பெரும்பாலான மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுவதை அறிந்த பள்ளித் தலைமைஆசிரியர் மதன்பிரபு பள்ளிக்குழந்தை கவரும் வகையில் நோ பேக் டே என்ற திட்டத்தினை செயல்படுத்தினார்.இதன்படி பள்ளி மாணவ மாணவியர்கள் ஒரு நாள் பள்ளிக்கு பாடப்புத்தகங்கள் அடங்கிய பை கொண்டு வராமல் வரச் சொன்னார்.இதன்படி பையின்றி உணவுபை(லஞ்ச்பேக்) மட்டும் பள்ளிக்குழந்தைகள் பள்;ளிக்கு கொண்டு வர அங்கு வகுப்பாசிரியகள் பள்ளிக்குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களுக்கு பிடித்ததை கேட்க ஆரம்பித்தார்.பலர் டான்ஸ் பிடிக்கும் எனக்கூற செல்போனில் அவர்களுக்கு பிடித்த பாட்டைப் போட்டு மாணவ மாணவிகளை டான்ஸ் ஆடச் செய்தனர்.
பள்ளிக்குழந்தைகள் ஆட உற்சாக மிகுதியில் ஆசிரியர்களும் சேர்ந்து அவர்களுடன் ஆட ஆரம்பித்தனர்.  பின் மாணவர்களின் வேண்டுகோளின்படி சில மாணவர்கள் சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடினர்.அதற்குப்பின் பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி ஓவியப்போட்டி என ஒவ்வொன்றையும் பள்ளி மாணவ மாணவிகளின் விருப்பத்திற்கேற்ப போட்டிகள்; நடத்தினர்.இது குறித்து பள்ளித் தலைமைஆசிரியர் மதன்பிரபு கூறுகையில் மற்ற நாட்களை விட மாணவ மாணவிகள் நோ பேக் டே நாளில் வகுப்பு ஆசிரியர்களிடம்; இயல்பாக நெருங்கிப் பழகியதாகவும் இதனால் அவர்களின் தனித்திறமை என்ன என்பதையும் அவர்கள் எதில் ஆர்வமாய் உள்ளனர் என்பதையும் கண்டறிந்தனர் எனக் கூறினார்.மேலும் வருடம் ஒருமுறை இத்திட்டத்தினை பள்ளியில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறினார்.

மற்ற நாட்களை விட இந்நாளில் மாணவ மாணவிகள் பள்ளிச்சுமையை மறந்து உற்சாகமாய் இருப்பதைக் காண முடிந்தது.இதன் மூலம் அவர்களின் விருப்பங்களையும் தனித்திறமைகளையும் மனநிலையையும் ஆசிரியர்கள் அறிய முடிகிறது.இதன்பின் ஒவ்வொருவருக்கும் பாடங்கள் நடத்துவது சுலபமாகிறது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.  இதே போன்று ஒவ்வொரு பள்ளியிலும் செயல்படுத்தினால் பள்ளிக்குழந்தைகளின் மனநிலை மாறி உற்சாகமாய் பள்ளிக்கு வருவது உறுதி.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!