தமிழகம்

நிலக்கோட்டை அருகே இரு பிரிவினர் இடையே நடந்த மோதலால் நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த கும்பாபிஷேகம்; வட்டாட்சியர் தனுஷ்கோடி தலைமையில் சுமூக பேச்சுவார்த்தை: கிராம மக்கள் மகிழ்ச்சி

104views
நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது மேற்கண்ட இரண்டு ஊர் மக்களிடையே பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு நிலக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து கரியாம்பட்டி ஊர் மக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன், மஹாகணபதி, பகவதியம்மன், ஸ்ரீமுனியப்பன் கோவில்களில் 3.2.2023 முதல் 5.2.2023 வரை கோவில் கும்பாபிசேகம் நடைபெறுவதற்கு அந்த ஊர் மக்கள் நிலக்கோட்டை வட்டாட்சியரிடம் அனுமதி கோரியுள்ளனர்.
இது தொடா்பாக கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டி ஊர் பொதுமக்களை நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வரவழைத்து வட்டாட்சியர் தனுஷ்கோடி முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இரண்டு ஊர் பொதுமக்களும் பிரச்சனை ஏதும் செய்ய மாட்டோம் என்று அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் தெரிவித்தனர் . மேலும் இரண்டு ஊர் பொதுமக்களுக்கிடையே ஏற்பட்ட சுமூகப் பேச்சுவார்த்தை மூலம் கும்பாபிசேகம் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவை ஒட்டி இரு ஊர் பொதுமக்களுக்கிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் நிலக்கோட்டை காவலர் ஆய்வாளர் குரு வெங்கட் ராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!