தமிழகம்

நெல்லையில் உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு போட்டிகள்; பரிசளிப்பு விழா

97views
நெல்லையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகள் மற்றும் மாற்று வழிகளை கண்டறிதல் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் வண்ணம் தீட்டுதல், ஓவியப்போட்டி, மற்றும் நெகிழிக்கு மாற்றுப் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்கள் போட்டிகள் என மூன்று போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.மேலும் பள்ளிக்கல்வி துறை சார்பில் அருங்காட்சியகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. அப்போது அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த பார்வையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிஸ்டம் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் ரிப்ளிக்கா அனைவரையும் வரவேற்றார்.

நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் வெ. திருப்பதி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியத்தையும் பொருநை நதியை போற்றி பாதுகாக்க மாணவ மாணவிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் விவரித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காவலர் விருத்தாளர் சங்கர் மேனிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை திட்ட அலுவலர். முனைவர் கோ கணபதி சுப்பிரமணியன் சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான உறுதி மொழியை ஏற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஆல் தி சில்ட்ரன் ட்ரஸ்டின் ஒருங்கிணைப்பாளர் ரீகன் நன்றியுரை ஆற்றினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!