தமிழகம்

நெல்லையில் கல்வியில் சாதனை படைத்த மாணவ மாணவிகள்; ஷிபா கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரிசுகள் வழங்கி பாராட்டு

63views
நெல்லையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை திருநெல்வேலி ஷிபா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் எம்.கே.எம் முகமது ஷாபி பரிசுகள் வழங்கி பாராட்டினார். திருநெல்வேலியில் செயல்படும் ஷிபா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையினர், ஆண்டு தோறும் கல்வியில் சாதித்த மாணவ மாணவிகள் அனைவரையும் பாராட்டி பரிசுகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கும் விழா ஷிபா கல்வி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்.எம்.கே.எம். முகமது ஷாபி தலைமையில் நெல்லையில் நடந்தது. இந்நிகழ்வில் நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த நெல்லை டவுண் மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மாணவி ஆயிஷா மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 495 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி மாணவர் அர்ஜுன் பிரபாகரன், டைம் மெட்ரிக் தனியார் பள்ளி மாணவி நூகா ஆகியோரை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!