தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் பிறந்த தின விழா போட்டிகள்; காப்பாட்சியர் தகவல்

125views
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரிவித்துள்ளார். இது குறித்து காப்பாட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாகவி பாரதியாரின் பிறந்த தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும், ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட் ஈஸ்டு கோஸ்டு இணைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (18-12-2022) பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த உள்ளனர்.
ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான தலைப்புக்கள் பின்வருமாறு: 1,2,3,4,5 ஆம் வகுப்பு – பாடல் ஓப்புவித்தல் போட்டி (2 நிமிடங்களுக்கு மிகாமல்) பாரதியார் பாடல்கள், 6,7,8,9,10,11,12 ஆம் வகுப்பு- ஓவியப் போட்டி-தலைப்பு பாரதியார். கல்லூரி மாணவர்களுக்கு “சரித்திர தேர்ச்சி கொள்” எனும் தலைப்பில் கவிதைப் போட்டி ( 24 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி வந்து வாசிக்க வேண்டும்).
போட்டிகள் காலை 10.00 மணிக்கு துவங்கப்படும். மாணவர்கள் 9.30 மணிக்குள் தங்களின் பெயர்களை கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டும். வரைவதற்கு தேவையான தாள்கள் வழங்கப்படும். எழுதுப் பொருட்களும், வைத்து எழுத தேவையான அட்டையும் மாணவர்களே கொண்டு வருதல் வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 7502433751 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!