தமிழகம்

நகைக்கடை உரிமையாளர் கொலை வழக்கு – காவல்துறை ஏட்டு உட்பட 7 பேர் கைது

131views
மதுரையில் வாங்கிய கடனை திருப்பி தராத நகைக்கடை உரிமையாளரை கூலிப்படையை ஏவி கொலை செய்த குற்றப்பிரிவு காவல்துறை ஏட்டு உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (42) என்பவர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நகைக் கடையையும், இந்து மக்கள் கட்சியின் தென்மாவட்ட துணை செயலாளராகவும் இருந்து வந்தார்.
கடந்த (31.03.2023) திங்கட்கிழமை இரவு தன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய நிலையில் மணிகண்டன் உயிரிழந்தார்.
இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறை குற்றப்பிரிவு ஏட்டு ஹரிஹரன், அன்புராஜன், கார்த்தி,அழகுபாண்டி, மணிகண்டன், பாண்டி, ஹைதர் அலி ஆகிய 7 பேரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் மணிகண்டன் வாங்கிய கடனை திருப்பி தராததால் ஹரிஹரன் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாகவும், மேலும் ஹரிஹரனுக்கு தெரிந்த பெண் ஒருவர், மணிகண்டனுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததால் அவரை கொலை செய்ய ஹரிஹரன் சொன்னதாகவும் கூலிப்படையினர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் காவல்துறையினர் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!