தமிழகம்

தமிழக ஆளுநர் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது. பாஜக பாலியல் ஜனதா கட்சியாக உள்ளது.சூர்யா சிவா மீது தமிழக காவல்துறை வழக்காக பதிவு செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி

226views
மதுரை திருநகர் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 37 வதுதேசியப் புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கண்காட்சியை திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்:
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செயல்பாடு குறித்த கேள்விக்கு, தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது. இது மிகப்பெரிய ஐயத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது.  பல மக்கள் தங்களின் சேமிப்புகளையும், கடன் வாங்கி பணங்களையும் இழந்து தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆளுநர் தாமதப்படுத்துவது அவரின் நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.  ஆளுநர் ஏன், எதற்காக இதை ஆதரிக்கிறார் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இதைப் பற்றி பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
கப்பலூர் சுங்கச்சாவடி தொடர்பான கேள்விக்கு,  கொரோனாவிற்கு முன்பாக நித்தின் கட்கரியை சந்தித்து மனு கொடுத்தேன். அப்போது அவர் கூறியது, இந்த சுங்கச்சாவடி வழக்கு விசாரணையில் இருப்பதாகவும் இப்போது எதுவும் செய்ய முடியாது வழக்கு முடிந்த பிறகு முயற்சிக்கலாம் என்றார். ஆனால் மத்திய அரசு திருமங்கலம், மதுரை தொகுதி மக்களுக்கு பெரிய துரோகத்தை செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் மனு அதிர்ச்சிகரமானது இதை எதிர்த்து வருகின்ற நாடாளுமன்றத்தில் இதற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்திப்பேன்.
மின் இணைப்பை ஆதாருடன் இணைக்கும் திட்டம் குறித்த கேள்விக்கு, ஆதார் இணைப்பு என்பது மக்களின் நலனுக்காக கொண்டுவரப்படுவதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது இந்த நிலை மாறி மோடி அரசு ஆதாரை வைத்து ஏழை, நடுத்தர மக்களின் பணத்தை உறிஞ்சும் செயலை செய்கிறது. இந்த மின்சார கட்டணத்தின் நகல் வடிவையே காங்கிரஸ் கட்சி எதிர்த்துள்ளது.  இது சட்டமாக நிறைவேற்றப்பட்டதே தவறு இதை எதிர்த்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எதிர்காலத்தில் இது மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கும்.

பாஜக சூரியா சிவா தொலைபேசி உரையாடல் குறித்த கேள்விக்கு. பாஜகவை பொறுத்தவரை பாலியல் ஜனதா கட்சியாக உள்ளது. ராகவனாக இருக்கட்டும் சூர்யாவாக இருக்கட்டும் ஆர் எஸ் எஸ் முழு பயிற்சி அடிப்படையில் அவர்கள் செய்யும் லீலைகள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் வெளி வருகிறது. இதற்கு பத்திரிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சூர்யா சிவா மீது தமிழக காவல்துறை வழக்காக பதிவு செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகவன் தொடங்கி சூர்யா வரை அவர்களின் லீலை வெளிவருவது திமுக ஆட்சிக்கு பின்பு தான்.

2015 தேர்தலில் இலவசத்தை எதிர்த்த பாஜக தற்போது குஜராத் தேர்தலில் 40 பக்கம் இலவச அறிக்கை குறித்த கேள்விக்கு, பாஜக தொடர்ந்து இலவசங்களை கேலி செய்வதும், இல்லாதவர்களுக்கு அரசாங்கத்தின் உதவிகளை கேலி செய்வதை வேலையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இல்லாதவர்களுக்கு கொடுப்பதுதான் அரசின் கடமையாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பார்க்கிறது. நாங்கள் நாளும் மாநிலங்களிலும் இல்லாதவங்களுக்கு அளிக்கும் ஆட்சியாக தான் உள்ளது தற்போது பாஜக தங்களுடைய உண்மையான முகத்தை காட்டுகிறது என்றார்.
செய்தியாளர் : வி காளமேகம்,  மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!