தமிழகம்

ராமேஸ்வரத்தில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்

110views
ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் நல வாரிய உறுப்பினர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி ஆணையை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
ராமநாதபுரத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், மீனவர்கள் தொழில் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மீனவர் குடியிருப்பு பகுதிகளை சீரமைத்து தர வேண்டுதல், பிற மாவட்ட மீனவர்கள் படகில் மீன்பிடிக்கும் பகுதிக்கு வராமல் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து மீன்வளத்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் தங்கி மீன் பிடிப்பதற்கு நிழற்குடை வசதி அமைத்து தரவும் கடற்கரை பகுதிகளில் சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரோச்மா நகர் மீனவர்கள் கிராமத்தில் கடலில் கல் நிரப்பும் பணி ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது, விரைந்து முடிக்கப்படும். மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க வழங்கப்படும் அடையாள அட்டை வழங்குவது தாமத்தை கருத்தில் கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள மீன்வள உதவி இயக்குநர்கள் மூலம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை புதிய பயனாளிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் தமிழ்நாடு மீனவர் நலத்துறை ஆணையத்தின் மூலம் செலுத்தப்படும. ராமேஸ்வரத்தில் கடலுக்கு சென்று மகாத்மா (எ) கார்த்திக் மாயமானதையடுத்து தாயார் கலையரசியிடம் தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் ரூ.1 லட்சத்திற்கான நிவாரண நிதி ஆணையை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.
உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மீன்வளத் துறை துணை இயக்குநர், காத்தவராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!