தமிழகம்

திருமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் , நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பாரம்பரிய தானிய உணவு வகைகளை கண்காட்சியில் வைத்து , மாணவ, மாணவிகள் அசத்தல்.

153views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் , 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வரும் நிலையில் ,இன்று பள்ளியின் சார்பில் உணவு திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழாவில் பாரம்பரிய உணவு தானிய வகைகளைக் கொண்டு, 50க்கும் மேற்பட்ட வகை, வகையான உணவு வகைகளை பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் வீட்டில் தயார் செய்து ,மாணவ, மாணவிகள் மூலம் பள்ளியில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டது. இதில் பல்வேறு புரதச்சத்துக்கள், கால்சியம் , கேப்பை ,கம்பு ,தூதுவளை உள்ளிட்ட தானிய வகை தோசைகளையும் காரட் ,கத்திரி போன்ற காய்கறிகளை வைத்து கேசரி உள்ளிட்ட இனிப்பு வகைகளையும் மற்றும் மாணவிகளின் ஞாபகத்திறன் வளர்க்கும் விதமாக தானிய உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு,
மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் அதனை ரசித்து, ருசித்து மாணவ,மாணவிகளை மற்றும் அவரது பெற்றோர்களையும் பாராட்டினார்.
இந்த உணவு திருவிழா கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் பல்வேறு வகையான பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து ஆசிரியர் ஆசிரியர்களை அசத்தினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!