270views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட 58 கிராம கால்வாய் இளைஞர் சங்கம் தலைவர் சௌந்தரபாண்டியன் கலந்துகொண்டு உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக்கொலை அதிகம் நடைபெறுவதால் தொட்டில் குழந்தை திட்டத்தை பற்றி விழிப்புணர்வு அதிக அளவில் பொதுமக்களுக்கு வெளிக்கொண்டு வரவேண்டும் ரத்ததான முகாம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கிராமங்கள் மற்றும் கல்லூரியில் நடைபெற வேண்டும்.
இதற்கு முழு உறுதுணையாக 58 கிராம கால்வாய் இளைஞர் சங்கம் சார்பில் உதவுவதாகவும் தெரிவித்தனர் இந்த கூட்டத்தின் தலைமை மருத்துவர் செவிலியர்கள் காவல்துறையினர் யூனியன் சேர்மன் மற்றும் 58 கிராம இளைஞர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: உசிலை சிந்தனியா