தமிழகம்

ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பினை முன்னிட்டு பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்து சிலர் நூதன முறையில் வேண்டிக் கொண்டனர்.

64views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள அக்ரஹாரம் தெருவில் ருக்மணி சத்யபாமா சமேத சந்தான வேணுகோபால் கிருஷ்ணசாமி கோயில் உள்ளது. மகா தேவ அஷ்டமி மற்றும் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று பகலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஹரியும், சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த அபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த உணவை உண்பதால் அனைத்து விதமான நோய்களும் தீரும் என்பது ஐதீகம். மேலும் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் போது, புத்திர பாக்கியம் திருமண தடை மற்றும் வியாபார விருத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.
எனவே ஆண்கள் பெண்கள் வித்தியாசமின்றி பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப் பிரதட்சணம் செய்தனர். பின்னர் இலைகளை தலையில் வைத்து எடுத்து சென்று அப்புறப் படுத்தினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!