தமிழகம்

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு முன்கவனிப்பு வார்டு திறப்பு

86views
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு முன் கவனிப்பு வார்டு திறக்கப்பட்டது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் 10 முதல் 15 பிரசவங்கள் நடைபெறுகிறது. பிரசவத்திற்காக தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்து தாய்மார்கள் தென்காசி மருத்துவமனைக்கு வருவதால், பிரசவ முன் கவனிப்பு படுக்கைகள் தட்டுப்பாடு இருந்து வந்தது. இந்நிலையில் அதனை சீர் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுரைப்படி, தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர் பிரேமலதா, மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் ஆகியோரின் ஏற்பாட்டில் 20 படுக்கைகள் உடைய மகப்பேறு முன் கவனிப்பு வார்டு தயார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் உறைவிட மருத்துவர் முன்னிலையில், இணை இயக்குனர் நலப்பணிகள் பிரேமலதா பிப்.08 புதன் கிழமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மகப்பேறு துறை தலைவர் மருத்துவர் புனிதவதி, மருத்துவர் தமிழருவி, மருத்துவர் சைனி கிருத்திகா, மருத்துவர் விஜயகுமார், செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, ஜெகதா இவர்களுடன் மகப்பேறு பிரிவில் பணிபுரியும் அனைத்து செவிலியர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மகப்பேறு முன் கவனிப்பு வார்டை திறந்து வைத்து பேசும் போது, உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் இந்த வார்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணி காக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். உறைவிட மருத்துவர் எஸ் எஸ் ராஜேஷ், வார்டு பணியை சிறப்பாக செய்து கொடுத்த பொதுப்பணித்துறை பொறியாளர்களையும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!