தமிழகம்

மதுரை மண்டல 5ல், அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இயற்கை மரணம் அடையும் முதியவர்களுக்கு மற்றும் இயற்கை மரணம் அடைபவர்களுக்கும் சில மருத்துவர்கள் லஞ்சம் பெற்று இறப்பு சான்றிதழ் வழங்குவதாக மதுரை துணை ஆணையரிடம் கவுன்சிலர்கள் புகார்

230views
மதுரை திருப்பரங்குன்றம் மண்டலம் 5-ல் குழு கூட்டத்தில் இன்று மண்டல தலைவர் சுவிதா விமல், துணை ஆணையர் சையது முஸ்தபா காமல்., நிர்வாக அலுவலர் ஆறுமுகம்., சுகாதார அலுவலர் விஜயகுமார்., திட்டம் உதவி செயற்பொறியாளர் இந்திரா தேவி., உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் மாதாந்திர மதுரை மண்டலம் 5 குழு கூட்டம் மாமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மேற்கு மண்டலம் 5ல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாமன்ற கூட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகளான அனைத்து வசதிகளும் செய்து தருவது., உள்ளிட்ட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து., அதிகாரிகளிடம் மாமன்ற உறுப்பினர்கள் பேசும் பொழுது வயது முதிர்ந்தவர்கள் அல்லது இயற்கை மரணம் அடைந்தவர்கள் மருத்துவர்களிடம் இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கு., அரசு மருத்துவர்கள் அல்லது தனியார் மருத்துவமனை நடத்தும் மருத்துவர்கள் இறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு அதிகம் பணம் கேட்பதாகவும்., ஒரு சில மருத்துவர் லஞ்சம் வாங்கிக் கொண்டு பல்வேறு இடங்களில் இயற்கை மரணம் அடையும் நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதாகவும் இதனை மதுரை மாநகர் சுகாதார அலுவலர் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கவுன்சிலர்களுக்கு உறுதியளித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!