தமிழகம்

தேசிய நெடுஞ்சாலையில் தூண்டப்பட்ட பள்ளம் மழையால் கீழே விழுந்த வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசல் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை உயிர்பலி ஆகும் முன் நடவடிக்கை மேற்கொள்ளுமா?

24views
மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகர் சரவணா ஸ்டோர் எதிரி கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை 50 அடிக்கு மேல் சாலையின் நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு சரிவர மூடாததால் சாதாரண நேரங்களிலே நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளானார்கள். இதில் பலர் கீழே விழுந்து காயமும் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவ்வளவு ஏற்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் தகவல் தெரிவித்து எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.  மேலும் இந்த நிலையில் பெய்த மழையில் சகதியில் சிக்கி இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
மேலும் பசுமலை முதல் ஆண்டாள்புரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது தினசரி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சரிவர மூடாததால் உயிர் இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.  அதிகாரிகள் உயிர்பலி ஆகும் முன் நடவடிக்கை எடுப்பார்களா?
செய்தியாளர் ; வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!