தமிழகம்

மதுரை வலையங்குளம் பகுதியில் போலி மருத்துவர் கைது; மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து கைது செய்ய உத்தரவிட்டார்

47views
தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 30க்கும் மேற்பட் ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று காலை வளையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆய்வு கட்டிடத்தை ஆய்வு செய்ய வந்திருந்தார். அப்போது அவரிடம் போலி மருத்துவர் குறித்து புகார் மனு வந்ததது.
உடனடியாக வலையங்குளம் பகுதியில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சங்கீதா மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டு மருத்துவரிடம் சான்றிதழ் உள்ளதா என்று விசாரித்ததில் அவர் போலி மருத்துவர் என்று தெரியவந்ததையடுத்து கீதா மருத்துவமனை என்ற பெயரில் போலியாக மருத்துவம் பார்த்து வந்த அழகர்சாமி (55) என்பவரை கைது செய்ய உத்தரவிட்டார். எனவே பெருங்குடி போலீசார் அழகர்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!