தமிழகம்

மதுரையில் பட்ட பகலில் சரமாரியாக வெட்டிப் படுகொலை; போலீசார் விசாரணை

1.93Kviews
மதுரை மாநகர் தத்தனேரி பகுதியில் உள்ள வைகைக்கரை பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சரவணகுமார் என்ற இளைஞரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மதுரை செல்லூர் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர் தொடர்ந்து சம்பவ இடத்தில் செல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!