தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள் மற்றும் தற்கொலைகள் மற்றும் வழிப்பறிகள்

150views
திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் கத்தி முனையில் வழிப்பறி – வாலிபர் கைது
திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் கத்தி முனையில் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரிசல்குளம் ஆலவாய் நகரை சேர்ந்தவர் முருகன் மகன் தங்கப்பாண்டி 22 .இவர் பைபாஸ் ரோடு திண்டுக்கல் ரோட்டில் சொக்கநாதபுரம் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார் .அவரை சொக்கலிங்கபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் காசி 22 என்ற வாலிபர் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ 400 ஐ வழிப்பறிசெய்தார். இந்த வழிப்பறி குறித்து தங்கபாண்டி செல்லூர் போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறி செய்த வாலிபர் காசியை கைது செய்தனர்.
செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் காருக்கு தீவைப்பு – மர்ம  ஆசாமி கைவரிசை 
செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் நிறுத்தி இருந்த காருக்கு தீ வைத்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்தவர் மூர்த்தி 73. இவர் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான கார் ஒன்றை அதன் முன்பாக நிறுத்தி இருந்தார். சம்பவத்தன்று இரவு மர்ம ஆசாமி அந்த காரை தீவைத்து எரித்து விட்டார். இந்த சம்பவம் குறித்து மூர்த்தி செல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது காருக்கு தீ வைத்த ஆசாமியை தேடி வருகின்றனர்.
ஐயர் பங்களாவில் மூதாட்டியிடம் தங்க கடிகாரம், பணம்,செல்போன் பறிப்பு – மர்ம ஆசாமி கைவரிசை.
ஐயர் பங்களாவில் வீட்டிலிருந்த மூதாட்டியிடம் தங்க கடிகாரம் ,செல்போன், பணம் பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
அய்யர்பங்களா ஸ்ரீநகர் இரண்டாவது தெரு காவேரி தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி 66. இவர்வீட்டில் தனியாக இருந்தபோது சென்ற மர்ம ஆசாமிகள் வழிமறித்து அவரிடம் இருந்து ஒன்னேகால் பவுன் தங்க எடை கொண்டகைக் கடிகாரம், செல்போன் ஒன்று, பணம் ரூ 1500, ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டர் ஐடி, வங்கி லாக்கர்சாவி, முதலியவைகளை பறித்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி ராஜேஸ்வரி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பொருள்களை பறித்துச்சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!