தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள்

35views
செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் ஏடிஎம் அருகே கத்தி முனையில் வழிப்பறி – இரண்டு வாலிபர்கள் கைது.
செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் ஏடிஎம் அருகே கத்தி முனையில் ரூ 3ஆயிரம் வழிப்பறி செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
செல்லூர் ஜீவானந்தம் ரோடு ரவி மகன் செல்வகுமார் 23. இவர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஏடிஎம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இரண்டு வாலிபர்கள் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ3ஆயிரத்தை வழிப்பறி செய்துவிட்டனர். இந்த வழிப்பறி குறித்து செல்வகுமார் செல்லூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிபறியில் ஈடுபட்ட மீனாம்பாள்புரம் வ உ சி தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கரையான் என்ற சுந்தரபாண்டி 27, மருதுபாண்டியர் மேலதெரு ஜவஹர்லால் மகன் மாலிக் பாஷா 25 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பைக்காரா மெயின் ரோட்டில் கம்ப்யூட்டர் சென்டரை உடைத்து பொருள்கள் கொள்ளை.
பைக்காரா மெயின் ரோட்டில் கம்ப்யூட்டர் சென்டரை உடைத்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற அசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பைக்காரா பால நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் 42. இவர் பசுமலை மெயின் ரோட்டில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். வழக்கம்போல இரவு சென்டரை மூடி விட்டு சென்றார். மறுநாள் திறக்க சென்றபோது அதன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த செல்போன் ஒன்று, மூன்று பேன்கள்,பேனா 65, கால்குலேட்டர் 5 ,ஹெட் போன், ஸ்போர்ட்ஸ்கப்,ஓடி ஜி கனெக்டர், பேட்டரி உள்ளிட்ட பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றதுதெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து உரிமையாளர் சுரேஷ் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
சிக்னல் செய்யாமல் திடீரென்று திரும்பியதால் பைக்குகள் நேருக்கு நேர் மோதல் – வாலிபர்பலி
மதுரை புது விளாங்குடி சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முத்துக்குமார் 36. இவர் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் பைக் ஓட்டிச்சென்றார். அப்போது பெருங்குடியில் சென்று கொண்டிருந்தபோது லிங்கேஸ்வரன் என்பவர் பைக் ஓட்டி வந்து பின்னால் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சிக்னல் செய்யாமல் திரும்பியதால் இருவர் ஓட்டி சென்ற பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தலைகுப்புற கீழே விழுந்த முத்துக்குமார் தலையில் பலமா அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து முத்துக்குமாரின் மனைவி சாந்தி கொடுத்த புகாரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யானைக்கல் வைகை ஆற்றின் அருகே கஞ்சா பணத்துடன் வாலிபர் கைது
குலமங்கலம் மெயின் ரோடு கீழ பனங்காடியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் மகன் பிரபு 32. இவர் யானைக்கால் பாலம் சோமசுந்தர அக்ரஹார சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்த போது விளக்கத்தூண் சப்இன்ஸ்பெக்டர் மணிமாறன் அவரை கையும் களவுமாக பிடித்தார் .அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவையும் விற்பனை செய்த பணம் ரூ 5ஆயிரத்து நூற்றிப்பத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!