தமிழகம்

மதுரையில் நடந்த குற்ற சம்பவங்கள்

31views
மேல மடையில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து – போலீஸ் விசாரணை.
மேலமடையில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி கோவில்பட்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் லெனின் மகன் அலெக்ஸ் 20 .இவர் கோவையில் கல்லூரி ஒன்றில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் மதுரை மேலமடை மீனவர் சங்கம் ரோட்டில் உறவினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மோகன் என்பவர் அவரை ஆபாசமாக பேசி கத்தியால் குத்தி விட்டு ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து மாணவர் அலெக்ஸ் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கத்தியால் குத்திய மோகனை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணாபுரம் காலனியில் கணவர் இறந்த சோகத்தில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை
கிருஷ்ணாபுரம் காலனி பாரதியார் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் விநாயக முருகன் மனைவி சுசிதா 29. இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கணவர் விநாயகமுருகன் இறந்துவிட்டார். கணவர் இறந்த நாள் முதல் மனைவி சுசீலா மன வருத்தத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா ராஜாத்தி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண் சுசிதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பஸ்ஸில் மூதாட்டி இடம் நகை பணம் திருட்டு – மர்ம ஆசாமி கைவரிசை.
மதுரை ஜன 26 ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பணம் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். திருநகர் சௌபாக்கிய நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் மூதாட்டி தனலட்சுமி 75. இவர் டவுன் பஸ்ஸில் ஆர்விபட்டிக்கு பயணம்செய்தார்.அவர் ஆர்.வி.பட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கி பார்த்தபோது அவர் வைத்திருந்த பையில் இருந்த இரண்டு பவுன் தங்க நகை, பணம் ரூ3ஆயிரம், செல்போன் ஒன்று, ஏடிஎம் கார்டு ஒன்று முதலியவற்றை ஆசாமி திருடிவிட்டார் மூதாட்டி தனலட்சுமி பெருநகர் போலீஸ் செய்து ஓடும் வருடன் நயணம் செய்த ஆசாமி திருடியது தெரியவந்தது.இந்த திருட்டுகுறித்து தனலெட்சுமி திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து ஓடும் பஸ்ஸில் நகை பணம் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!