தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த இன்றைய குற்றச்செய்திகள்

72views
காதலனுடன் சென்ற பெண்ணை அழைத்து வர சென்ற தந்தை மீது தாக்குதல் – இரண்டு பேர் கைது
விருதுநகர் மாவட்டம் முஸ்டக்குறிச்சி ,பெத்தரேந்தலை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் பொன் பாண்டி . இவருடைய மகள் அவனியாபுரம் வள்ளலானந்தபுரத்தை சேர்ந்த கருப்பு என்ற திவாகரரை காதலித்து வந்தார்.அவர் பெற்றோருக்கு தெரியாமல் அவருடன் சென்று விட்டார் .இதை அறிந்த பொன்பாண்டி மகளை அழைத்து வர அவனியாபுரம் வள்ளலானந்தபுரத்திற்கு சென்றார்.அங்கே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சேகர்,கருப்பு என்ற திவாகர் ,பரமேஸ்வரி ஆகியோர் அவரை ஆபாசமாக பேசி தாக்கினர். இரும்பு கம்பியால் அடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொன்பாண்டி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சேகர், கருப்பு என்ற திவாகர், பரமேஸ்வரி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து சேகரையும் ,கருப்பு என்ற திவாகரையும் கைது செய்தனர்.
முத்துப்பட்டியில்  வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் மீது கொலை வெறி தாக்குதல் – 5 பேர்கொண்ட கும்பல் கைது.
முத்துப்பட்டி விருமாண்டி தெருவை சேர்ந்தவர் செல்வம் 40.அவரிடம் ஐந்து பேர் கொண்ட கும்பல் காசி என்பவரை பற்றி எங்கு இருக்கிறார் என்று விசாரித்துள்ளனர் .இதற்கு செல்வம் பதில் கூற மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரது பைக்கை உடைத்து அவரை ஆபாசமாக பேசி தாக்கி கத்தியால் குத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து செல்வம் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து சடேஸ்வரன் மகன் நிதிஷ் 20, முத்துப்பட்டி அவனியாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த பார்த்தசாரதி மகன் மணிகண்டன் 23, பசுமலை அம்பேத்கர் நகர் குமரேசன் மகன் சரத்குமார் 22, முத்துப்பட்டி அய்யனார்புரம் முதல் தெரு அந்தோணி மகன் சக்திகள் 23, முத்துப்பாண்டி காளியம்மன் கோவில் தெரு பாண்டி மகன் ரஞ்சித் குமார் 25 ஆகிய ஐந்து பேரும் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
இதே கும்பல் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் முத்துப்பட்டி பாலரெங்கநாதபுரம் கண்மாய்கரையில் சிவகார்த்திகேயன்19 என்பவரிடம் கஞ்சா கேட்டு மிரட்டியுள்ளனர். இதை தொடர்ந்து அவரை மரக்கட்டையால் அடித்தும் பாட்டிலை உடைத்து குத்தியும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிவகார்த்திகேயன் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரை தாக்கிய இந்த கும்பல் ஐந்து பேரையும் கைது செய்தனர். இந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் சில மணிநேரத்தில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழமாரட் வீதியில்  வீடு புகுந்து தாக்குதல் பொருள்கள் உடைப்பு – ஒருவர் கைது
கீழமாரட் வீதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 52. இவர் அந்த பகுதியில் கட்டிடம் ஒன்றின் முதல் தளத்தில் குடியிருந்து வருகிறார். இந்த கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் ராஜகோபால் மகன் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வாய் சண்டையில் தொடங்கி தகராறு முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியராஜன் சுந்தர்ராஜன் வீடு புகுந்து அவரை தாக்கி ஆபாசமாக பேசி வைத்திருந்த டால்டா ,நெய் டின்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து சுந்தர்ராஜ் விளக்கத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைதாக்கி, வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்திய பாண்டியராஜனை கைது செய்தனர்.
ஐயர் பங்களாவில்  மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி – வேலை செய்த போது பரிதாபம்
திருவண்ணாமலை தண்டராம்பட்டு மஞ்ஜம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தன் மகன் ராஜேந்திரன் 31 .இவர் ஐயர் பங்களா பாரதிதாசன் தெரு ஈ.பி.காலனியில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவர் மின்சாரத்தில் இயங்கும் டிரில்லிங் மிஷினை இயக்கிக் கொண்டிருந்தார்.ஜ அப்போது எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு ராஜேந்திரனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் செல்லும் வழி யிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த சம்பவ குறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் உயிரிழந்த ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவம் குறித்து தனியார் பைப் கம்பெனி உரிமையாளர் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்,சப் காண்டிராக்டர் செல்லமுத்து ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து தொழிலாளி ராஜேந்திரன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராட்டிபத்து செக் போஸ்டருகே அடையாளம் தெரியாத கார் மோதி பைக்கில் அமர்ந்து சென்றவர் பலி
ஜெயஹிந்த்புரம் ராமையா தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் சுகுணேஸ்வரன் 29 .இவர் நண்பருடன்பைக்ஙில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.அவர்கள் சென்ற பைக் விராட்டிபத்து செக்போஸ்ட் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்ற அடையாளம் தெரியாத கார் அவர்கள்மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்து சென்ற சுகுனேஸ்வரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அவருடைய மனைவி சத்யஜோதி புகாரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மீது மோதிய காரையும் கார் உரிமையாளரையும் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!