தமிழகம்

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த்,முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

68views
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்கள்.  மதுரை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, மண்டலம் 3 வார்டு எண்.75 வசந்த நகர், ஏ.ஆர்.தோப்பு பகுதியில் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும், சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.4.99 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்களை இணைக்கும் சிறிய இரும்பு பாலத்தினையும் மேயர், ஆணையாளர் ஆகியோர் திறந்து வைத்து பெரியார் பேருந்து நிலையம் அருகில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டுமான பணியினையும் மேயர், ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.  மேலும், பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும் நடத்தினருக்கான ஓய்வு அறையினையும், மண்டலம்-2 தத்தனேரி மின் மயானத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வசதிக்காக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓய்வு அறையினையும் மேயர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
முன்னதாக ,மதுரை ரிசர்வ்லைன் ஆயுதப்படை மைதானம் அருகில் உள்ள நியாய
விலைக்கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அறிவித்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை, மேயர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வழங்கினார்கள்.  இந்நிகழ்வில் ,  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவான்சு நிகம், மண்டலத் தலைவர்கள் பாண்டிச் செல்வி, சரவணபுவனேஸ்வரி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர்கள் மனோகரன், வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி பொறியாளர்கள் காமராஜ், ராஜசீலி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!