தமிழகம்

பெரியகுளம் பகுதியில் தனியார் மதுபான கடை இயங்க அனுமதி கோரி மது குடிப்போர் அமைப்பினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

65views
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த மதுக்கடைகள் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக பெரியகுளம் தென்கரைப் பகுதியில் அரசு அனுமதியுடன் 3. ஒன்றுபல வருடங்களாக நடத்தி வரும் மீனாட்சிபார்.இரண்டு காந்திசிலைஅருகில் ஆர்.ஆர்.பார்மூன்றாவது பவளம்தியேட்டர் எதிரபுறம்.தனியார் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெரியகுளம் வடகரை பகுதியில் மதுபான கடைகள் இல்லாத நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பாக புதிய பேருந்து நிலையம் முன்பாக அரசு அனுமதியுடன் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபான கடை செயல்பட தொடங்கியது. இந்நிலையில் ஒரு சில அமைப்பினர் அந்தப் பகுதியில் புதிதாக செயல்பட்ட மனமகிழ் மன்ற தனியார் மதுபான கடையை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் மதுபான கடை மூடப்பட்டது.
இந்நிலையில் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த மது குடிப்போர் என்று பெரியகுளம் வடகரை பகுதியில் செயல்பட துவங்கிய மனமகிழ் மன்றம் தனியார் மதுபான கூட்டத்தை தொடர்ந்து திறந்து செயல்படுத்த வேண்டுமென 50க்கும் மேற்பட்ட மது குடிப்போர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனியார் மதுபான கடை செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.
இது குறித்து மது குடிப்போர் கூறுகையில் பெரியகுளம் தென்கரை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிறுத்த பகுதியில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மூன்று மதுபான கடைகள் செயல்பட்டு வருவதாகவும் வடகரை பகுதியில் மதுபான கடைகள் இல்லாததால் அவற்றை வாங்குவதற்காக செல்லும் மது குடிப்போர் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளதால் மது குடி போரின் நலம் கருதி பெரியகுளம் வடகரை பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மதுபான கடையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!