தமிழகம்

சின்னமனூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு நூலகப்போட்டி

41views
சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,உயர் நிலை பள்ளி, மேல் நிலை பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நூலக போட்டிகளான கட்டுரை, ஓவியம்,திறனாய்வு, கதை சொல்லுதல் போன்ற தலைப்புகளில் சின்னமனூர் கவேஅ. மேல்நிலைப்பள்ளியில் போட்டிகள் நடைபேற்றது.
சின்னமனூர் வட்டார அளவிலான போட்டிகளை கவேஅ. மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் முனிராஜா மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சகாயராஜ் தொடங்கி வைத்தனர். போட்டியை ஆசிரியர் பயிற்றுநர்கள் பாக்கி ஜெயந்தி , லூக்கா, முத்துப்பாண்டி வழி நடத்தினார்கள்.

கன்னிசேர்வை பட்டி,காந்திஜி மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் செந்தில்குமார், சின்னமனூர்
முஸ்லிம் நடுநிலைப்பள்ளியின் ராமச்சந்திரன் ஆகியோர் கட்டுரைப் போட்டிக்கு நடுவர்களாக செயல்பட்டனர்.
MRV மார்க்கையன் கோட்டை அங்கயர்கன்னி,சீப்பாலக்கோட்டை அரசு உயர்நிலை பள்ளி சகுந்தலா ஆகியோர் ஓவியப் போட்டிக்கு நடுவர்களாக செயல்பட்டனர்.

இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், நகராட்சி முக்கியசாலை நடுநிலைப்பள்ளி, எலிசபெத் ஆகியோர் திறனாய்வுப் போட்டிக்கு நடுவர்களாக செயல்பட்டனர்.

தென்பழனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஜோசப், அப்பிப்பட்டி,காந்திஜி துவக்கப்பள்ளி திருமலை ஆகியோர் கதை சொல்லுதல் போட்டிக்கு நடுவர்களாக செயல்பட்டனர்.
போட்டிகளின் நடுவர்களாக அரசு பள்ளி ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக முன்னின்று நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவில் நடைபெறவிருக்கக் கூடிய போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக சின்னமனூர் வட்டார வள மைய அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!