தமிழகம்

தமிழக தேர்வர்களுக்கு வாசலை அடைக்கலாமா? -சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்.

159views
மத்திய தேர்வாணையம் 31.10.2022 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி Combined Graduate level Examinations (Tier 1) டிசம்பர் 1 முதல் 13, 2022 க்குள்ளாகவும், Scientific Assistant in IMD Examinations பதவிக்கு டிசம்பர் 14 முதல் 16, 2022 க்குள்ளாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே தேதிகளில் தமிழக கல்லூரிகளில் முதுகலைப் பட்ட செமஸ்டர் தேர்வுகள் இருப்பதால் இந்த பணி நியமன தேர்வுகளில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும்.

கடந்த காலங்களில் ஒன்றிய அரசு துறை/ நிறுவனங்களின் பணி நியமனங்களில் உரிய பங்கு தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என்ற நிலைமைகள் இருந்துள்ளன. 2011 இல் Scientific Assistant in IMD Examinations வெற்றி பெற்ற 465 பேரில் 3 பேர், 2017 இல் வெற்றி பெற்ற 1165 பேரில் ஒருவர் மட்டுமே தமிழர் என்ற தகவல்கள் தரப்படுகின்றன. 2022 இல் வாசலே இழுத்து மூடப்படுவது போல தேதிகள் உள்ளன.
ஆகவே தேர்வு தேதிகளை மாற்ற வேண்டுமென ஸ்டாப் செலக்சன் கமிஷன் மற்றும் இந்திய வானியல் துறைக்கும் சு. வெங்கடேசன் எம் பி கடிதம் எழுதியுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!