தமிழகம்

தென்காசியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்; விவசாய உபகரணங்கள் வழங்கல்

56views
தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 15.12.2022 அன்று நடந்த இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்ட நெல் – 23846 ஹெக்டேர், சிறுதானியங்கள்- 19430 ஹெக்டேர், பயறு வகைகள் – 29195 ஹெக்டேர், பருத்தி – 3833, கரும்பு – 1799 ஹெக்டேர், எண்ணெய் வித்து – 1203 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது. மழையளவு, நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு பற்றிய விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் ஒரு பயனாளிக்கு தலா ரூ 4000/- மானியத்துடன் நெல் விதைப்பு உருளைக் கருவி, இரண்டு பயனாளிகளுக்கு தென்னை மரம் ஏறும் கருவிகள், மற்றும் மூன்று பயனாளிகளுக்கு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்  கீழ் மானியமாக ரூ.60 ஒரு ஏக்கருக்கு என்ற வீதத்தில் நெல் வயல்களில் வரப்பு பயிராக வம்பன்- 8 ரக உளுந்து விதைகள் ஒரு பயனாளிக்கும், தோட்டக்கலைத் துறை மூலம் வாழைத்தார் உறை ஒரு பயனாளிக்கு ரூ.5000/- மதிப்பிலும், தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ரூ.16000/- மதிப்பில் வீரிய ரக ஒட்டு வெண்டை விதைகள் ஒரு பயனாளிக்கும், ரூ 2500/- ஒட்டுரக காய்கறிகளுக்கான இடுபொருட்கள் ஒரு பயனாளிக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஆகாஷ் வழங்கினார்.

கூட்டத்தில் கடையநல்லூர் மற்றும் கடையம் வட்டார வேளாண்மைத் துறையினர் மற்றும் கீழப்பாவூர் மற்றும் தென்காசி வட்டார தோட்டக்கலைத் துறையினர் ஏற்பாடு செய்திருந்த விவசாய கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். விவசாயப் பெருமக்களும் திரளாகப் பார்வையிட்டனர். சுரண்டை தென்றல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினரின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியையும், கபே இயற்கை தேனீ பண்ணை பொருட்களையும் திரளானோர் கண்டு களித்தனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 227 மனுக்களுக்கும் 14 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ஜெய்னுலாப்தீன், வேளாண்மை இணை இயக்குநர் தா.தமிழ்மலர், வேளாண்மை துணை இயக்குநர்(திட்டங்கள்) ந.க. நல்லமுத்துராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை (பொறுப்பு) ச.கனகம்மாள், தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, துணை இயக்குநர் வேளாண் விற்பனை மற்றும் வணிகம் கிருஷ்ணகுமார், செயற்பொறியாளர் (சித்தாறு உபவடிநிலக் கோட்டம்) எஸ்.சிவக்குமார், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் வீ.கங்காதேவி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் த.சுப்புலட்சுமி, உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) சங்கர், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!