தமிழகம்

சோழவந்தான் அருகே நெடுங்குளம் அருள்மிகு பூர்ண புஷ்கலா சமேத வெங்கலநாதமுடையான் அய்யனார் மகா கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

133views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பூர்ண புஷ்கலா சமேத வெங்கலநாதமுடையான் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த மாதம் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் நிகழ்வுகள் தொடங்கின.
நேற்றைய முன் தினம் செந்தில் சிவாச்சாரியார் நாகேஸ்வரர் சிவாச்சாரியார் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினரால் வெள்ளிக்கிழமை மாலை கணபதி பூஜை உடன் முதலாம் கால யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கி பூர்ணாஹூதி தீபாராதனை உடன் நிறைவுற்றது.
நேற்று சனிக்கிழமை காலை கணபதி பூஜை உடன் இரண்டாம் கால யாக பூஜை நிகழ்ச்சிகள் தொடங்கின.
இரவு 9:00 மணிக்கு யந்திர பிரதிஷ்டை நடைபெற்றது. தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கணபதி பூஜை உடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. பூர்ணாஹூதி நிறைவுபெற்று காலை சுமார் 8 45 மணி அளவில் கலசங்கள் புறப்பாடாகி மங்கள இசை உடன் திருக்கோவிலை வலம் வந்தது. சுமார் 850 மணி அளவில் பூர்ணா புஷ்கலா சமேத வெங்கலநாதமுடையான் அய்யனார் குதிரை வாகனத்திற்கு முதலில் கும்பாபிஷேகம் நிறைவுற்று. பின்பு மூலஸ்தானத்திற்கும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

பால் தயிர் நெய் வெண்ணெய் சந்தனம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் நெடுங்குளம் தச்சம்பத்து திருவேடகம் திருவாலவாயநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெடுங்குளம் கிராம பொதுமக்கள் மற்றும் கோயில் பூசாரிகள் செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!