தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுடைய கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சோனியா – கலைஞர் கொண்டுவந்த சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த வேண்டும் தமிழக வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம். தமிழக காங்கிரஸ் தலைவர் -கே.எஸ்.அழகிரி

57views
சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சேது சமுத்திரத் திட்டம் தேவை பற்றி மக்களிடையே பரப்புவதற்காக திராவிட கழகம் இன்று கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளனர் அதில் கலந்து கொள்வதற்காக நான் வந்துள்ளேன். சேது சமுத்திரம் திட்டம் என்பது தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டம் . அன்னை சோனியா காந்தி பொறுப்பேற்று இருந்தபோது கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அந்த மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே தென் தமிழகத்திற்கு சேது சமுத்திர திட்டம் வேண்டும் என சொல்லி இருக்கின்றனர். எனவே தமிழர்களின் ஒட்டுமொத்த விருப்பம் இது. சேது சமுத்திர திட்டம் 2500 கோடி ரூபாய் திட்டத்தில் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் செலவு செய்த பிறகு. அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது.  அந்தத் திட்டம் நிறுத்துவதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் சரியானது அல்ல. சூயஸ் கால்வாய், பனமா கால்வாய் போன்றவை அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு பெரும் வித்தாய் அமைந்தது. அதேபோல் சேது சமத்திர திட்டம் வந்தால் தென் தமிழகத்தில் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் எனவே ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்துக்காக மீண்டும் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக தற்போது வந்துள்ளோம்.
கமலஹாசன் ரத்தத்தில் ரத்த அணுக்கள் தான் ஓட வேண்டும் காங்கிரஸ் ஓடக்கூடாது என சீமான் கூறியது குறித்து கேள்விக்கு
ஒருவருடைய ரத்தத்தில் ரத்த அணுக்கள் தான் ஓடும் இவரது உவமையே தவறாக உள்ளது என்றார். இடைத்தேர்தலில் எங்களுடைய கூட்டணி மகத்தான வெற்றி பெறும் தமிழக வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம் அதற்கு எடுத்துக்காட்டாக தான் கமலஹாசன் தற்போது எங்களுக்கு ஆதரவாக வந்துள்ளார்.
ஆளுநர், முதல்வர் என்கின்ற அரசியலமைப்பு சட்டத்துடைய இரண்டு பாகங்கள். அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். இதுவே தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் கலந்து கொள்ளவில்லை, அது ஒரு மரபல்ல, மரபு என்பது என்னவென்றால் பிடிக்குதோ, புடிக்கவில்லையோ இதுவரை எவ்வாறு நடைபெற்றதோ அதனை பின்பற்ற வேண்டும். அதில் விருப்பு வெறுப்பு என்பது முக்கியமில்லை, தமிழக முதல்வரின் இந்த செயலை நான் பாராட்டுகிறேன் அவர் நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார் என்றார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!