தமிழகம்

சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

56views
மதுரை மாவட்டம். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ரிஷபம் கிராமத்தில் இரண்டாவது வார்டு பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது இங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சாக்கடை நீர் அதிகமாக கலந்து சுகாதாரமற்ற முறையில் வருகிறது. மேலும் முறையாக சாக்கடை சுத்தம் செய்யாததால் வீதி எங்கும் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீர் செல்லும் பகுதியில் அமைத்த பாலம் காரணமாக கழிவு நீர் வெளியேற முடியாமல் முழுவதுமாக மூடி சென்று விட்டனர்.
. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி செயலர் துணைத் தலைவரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. வட்டார வளர்ச்சி அலுவலர் மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை மேற்கொண்டு பாலம் கட்டியதில் ஏற்பட்ட முறைகேட்டையும் இப்பகுதி கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்வது தொடர்பாகவும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பது தொடர்பாகவும் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!