தமிழகம்

உசிலம்பட்டி 58 கிராம இளைஞர் சங்கத்தினர் கோரிக்கை

140views
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாய குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட செளந்திரபாண்டியன் தலைமையிலான 58 கிராம இளைஞர் சங்கத்தினர் பேசியதாவது,58 கிராம கால்வாய் திட்டத்தில் குளறுபடி நீக்கி முறையாக கடைமடை கண்மாய் வரை தண்ணீர் நிரப்பி தர வேண்டும்.2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 7 வது முறையாக சோதனை ஓட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வில்லை. 58 கிராம கால்வாய் திட்டத்தின் கீழ் அனைத்து கண்மாய்களையும் 35 நிரப்பி தர வேண்டும் என்றும்,  உசிலம்பட்டி கண்மாய் சுற்றிலும் 2 கிமீ சுற்றளவில் நடைபாதை அமைத்து நடுவே தீவுகள் போன்று உருவாக்கி மாடர்ன் கண்மாயாக மாற்றி தரவேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!