தமிழகம்

அரசு கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை

58views
அரசு பள்ளிகளில் விளையாட்டு, ஓவியம், கணினி, இசை, தையல் பாடங்களில் 11 ஆண்டாக பகுதிநேர ஆசிரியர்கள் 10ஆயிரம் ரூபாய் தொகுப்பூ ஊதியத்தில் சுமார் 12ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் அறிவித்தார்.
விடியல் தர போறாரு ஸ்டாலின் என்று திமுக நடத்திய உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய போதும் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிரந்தரம் செய்வதாக அறிவித்தார்.  முதல்வர் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்ததை செயல்படுத்த அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்து பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது –  பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய திமுக 10 ஆண்டாக சட்டசபையில் குரல் கொடுத்தது.  இப்போது திமுக அதனை நிறைவேற்றும் இடத்தில் ஆட்சியில் உள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள 18 அரசியல் கட்சிகள் முன்பு திமுக வைத்த அதே கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளது.  சட்டசபையிலும் அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி என 6 கட்சிகள் அதே கோரிக்கை வைத்து உள்ளது.  எனவே அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்து பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!