தமிழகம்

MRF Association பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முன்னெடுப்பால் கீழக்கரையில் நடைப்பெற்ற மாபெரும் சிறப்பு முகாம்

109views
கீழக்கரை, சாலைத் தெரு MRF Association பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள் முன்னெடுப்பால் 04.02.2023 அன்று மாபெரும் சிறப்பு முகாம் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை அலுவகத்தில் நடைபெற்றது, இந்த முகாம் மூலம் 600க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்றனர், முதியோர் உதவி தொகை, விதவை உதவித் தொகை மற்றும் ஆதார் அட்டை, பாண் கார்டு போன்ற இணையவழி மூலம் விண்ணப்பங்கள் பெறப்பெற்று சமர்ப்பிக்கப்பட்டது.

MRF association மூலமாக தொடர்ந்து பொது சேவைகள் செய்து வருவதை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

இந்த சிறப்பு முகாமை ஜகாத் கமிட்டி நிர்வாகி ஜனாப். அப்துல் ஜப்பார் தொடங்கி வைத்தார், மேலும் MRF association ஜனாப். பாஹிர் அவர்கள் ஜமாத் தலைவர் ஜனாப். யூசுப் சாஹிப் , மேலும் ஜகாத் கமிட்டியின் தலைவர் ஜாஹீர் ஹுசைன் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.

ஆதரவு தந்த அனைவருக்கும் விழாவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!