கவிதை

ஒவ்வொரு விடியலும்

419views
சேவல் கொக்கரிக்க
பறவைகள் சிறகடிக்க
கரும் போர்வை விளக்கி
கதிர்விசி எழுந்தது பரிதி
மேகங்கள் விலக
செவ்வந்தி பூ போல
செம்மஞ்சள் பந்தாக
தெரிந்தான் ஆதவன்
கதிரவனின் கதிர் பட்டு
கரும்பச்சை வயல்கள்
வெளிர் பச்சை நிறமாக
கண் கொள்ளாக் காட்சி
ஒவ்வொரு விடியலும்
தினம் நமக்கு சொல்லும்
இரவானால் பகல் ஒன்று
நிச்சயம் உண்டு
இருள் மட்டும் வாழ்வல்ல
விடியலும் தினமுண்டு
நம்பாத மனிதருக்கும்
இவ்வுண்மை தினமுண்டு
க.அகமத் பாஷா

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!