கவிதை

ஆதன்

157views
வேகமாகச்
சென்று கொண்டிருந்தான்
ஆதன்!
“உன்னிடம் ஒன்று
சொல்ல வேண்டும்!” என்றேன்.
“சொல்” என்றான்.
“உன்னைப் பற்றி
இப்படிச் சொன்னார்கள்;
எனக்கு மிகவும்
வருத்தமாக இருக்கிறது”
என்றேன்.
“உன்னிடம்
சொல்லப்பட்டது
உனக்கான இரகசியம்.
அதை ஏன்
எல்லோரிடமும்
சொல்கிறாய்?” என்றான்.
மேலும் சொன்னான்:
“மற்றவர்கள் என்ன
சொல்வார்கள்
என்பது பற்றி
எப்போதுமே
நான் சிந்திப்பதில்லை.
நான் சொல்வதும்
செய்வதும் அறமா?
என்பது பற்றி மட்டுமே
சிந்திக்கிறேன்”
என்று.
முனைவர் ஜா.சலேத்

செயின்ட் ஜோசப் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!